November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் ஜெர்மன் நிறுவனம் முந்துகிறது – பரிசோதனைக்கு தயார்
June 23, 2020

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் ஜெர்மன் நிறுவனம் முந்துகிறது – பரிசோதனைக்கு தயார்

By 0 646 Views

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற ( பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ) நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

ஜெர்மானிய டியுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.

இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதை  பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.

இன்னும் 2 மாதங்களில் அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்று 
பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பரிசோதனை முடிவுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மத்தியில், இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அப்படிப் பார்த்தாலும் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க நேரும் போலிருக்கிறது.