October 19, 2025
  • October 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்
March 16, 2020

விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்

By 0 890 Views
Gayathri Raghuram

Gayathri Raghuram

நேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை.

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக இருக்காதீர்கள்..!” என்றார்.

இதைக் கேட்ட ஆன்மிக ஆர்வலர் காயத்ரி ரகுராம் இன்று “மனிதனை மதிக்கும் செயலுக்கு வாழ்த்து நண்பா… ஆனா அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கணும். இங்கே மத உணர்வுள்ளவர்கள் கோடிக்கணக்குல இருக்காங்க. அந்த வகையில் அடுத்த ம்னைதனை மதிக்கிறதா நீங்க சொல்றது பொய்தான். கடவுள்தான் இங்கே எல்லாத்தையும் உருவாக்கியிருக்கிறார்..” என்று தனது ட்விட்டர் பேஜில் கமெண்ட் போட்டிருக்கிறார்.

அவர் சொன்னது என்ன… நீங்க புரிஞ்சிகிட்டது என்ன காயூ..?

Gayathri Tweet

Gayathri Tweet