April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா, ரெபா மோனிகா ஜான்
September 5, 2019

விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா, ரெபா மோனிகா ஜான்

By 0 1068 Views

‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’  மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார்.

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’,  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’,  உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள்  தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘ஜீவா’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ உள்ளிட்ட பன்முகப்பட்ட கதைகளத்தை உடைய பல திரைப்படங்களின் மூலமும்,  தனது அழுத்தமான நடிப்பின் மூலமும், மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் புதிய கோணத்தில் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முக்கியமான – சுவாரஸ்யமான வேடங்களில், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாகிறது.

பி சி ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், ‘கிருமி’ புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.

F.I.R Movie Pooja

F.I.R Movie Pooja