December 13, 2025
  • December 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி
March 18, 2020

நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி

By 0 950 Views

சின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம்.

இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. கொரோனா பாதிப்புக்காக படப்பிடிப்புகள் கூட முடங்கிப்போன இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்  ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அவருடன் சஞ்சீவும் நடித்திருக்கிறார்.

Sanjeev karthick, Alya Manasa

Sanjeev karthick, Alya Manasa

இந்தப் படத்தின் புகைபடங்களைப் பார்த்த பல ரசிகர்கள் “கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக மக்கள் வீட்டிள் முடங்கிக் இருக்கும் நிலையில் இன்னும் சில நாள்களில் குழந்தை பெறவிருக்கும் நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா என சஞ்சீவ் கார்த்திக்கை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆனால், சஞ்சீவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதான் தனது மனைவியை நடிக்க வைத்ததாகச் சொல்லி பதிலளித்து வருகிறார். அத்துடன் மானசாவும் சம்மதித்துதான் நடித்தார் என்றும் கூறுகிறார்.

எதுவும் பிரசினை ஆகாதவரை ஓகேதான்..!