November 22, 2024
  • November 22, 2024
Breaking News
April 8, 2019

தேர்தல் கமிஷனின் செல்பி போட்டி – 7 ஆயிரம் பரிசு

By 0 900 Views

தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்…

2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானதாம். இப்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் இருக்கவே, இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்.

இதற்காக அவர் இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு ‘செல்பி போட்டி’ ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி முதல்முறை வாக்களிப்பவர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் சிறந்த செல்பியின் அடிப்படையில் பரிசு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரமும் இரண்டாவது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரமும், மூன்றாவது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் வாக்காளர்களுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் பாருங்கள்..!