November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 25, 2019

விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்

By 0 931 Views

நேற்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா திவாஸ்’ எனும் விழாவில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மந்திரி பொறுப்பு ஏற்று முதன்முறையாக இவ்விழாவில் உரையாற்றி சிலருக்கு விருதுகளும் வழங்கினார். அப்போது அவர் பேசியதிலிருந்து…

“பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முய்ற்சிகளில் பாஸ்போர்ட்டில் ‘சிப்’ ஒன்றை பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ நடைமுறைக்கு வரும். தற்போது ஆண்டிற்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஸ்போர்ட்டுகளுக்கான மத்திய அரசின் சேவை மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வந்திருக்கிறது..!”