April 19, 2024
  • April 19, 2024
Breaking News
June 30, 2019

உலகின் ஆபத்தான 7 சிகரங்களில் ஏறி இந்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி சாதனை

By 0 619 Views

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபர்ணா குமார் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். நாற்பத்தைந்து வயதான இவர் இரு குழந்தைகளின் தாயாக இருக்கும் நிலையிலும் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கடந்த 2014-ம் ஆண்டில் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிகாவில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 டிகிரி அளவிலான கடும்குளிரில் வெற்றிகரமாக ஏறி முடித்தார். இப்போது வட அமெரிக்காவில் அமைந்துள்ள தெனாலி மலைச்சிகரத்தை ( உயரம் 20 ஆயிரத்து 310 மீட்டர் ) அடைந்து தனது இலக்கை அடைந்தார்.

அரசுப் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரி என்ற வகையில் அபர்ணா குமார் முதன்முதலாக இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.