November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயற்கை விவசாயத்துக்கு விழா எடுத்த திரை இயக்குநர்
August 3, 2019

இயற்கை விவசாயத்துக்கு விழா எடுத்த திரை இயக்குநர்

By 0 626 Views

இயற்கை விவசாயத்தைப் பற்றி ‘குத்தூசி’ என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி, நிஜத்தில் தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை… அதுவும் பாரம்பரிய நெல்லில் செய்து வருகிறார். அத்துடன் நில்லாமல் தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா ஒன்றை நடத்தினார்.

விழாவில் ‘நம்மாழ்வார்’ படத்தை திறந்து வைத்து இயற்கைவிவசாயம் ஏன் வேண்டும் , அதன் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள். மற்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம், காலாநமக், மாப்பிள்ளை சம்பா தந்தும் ஏரி கரையில் நட பனை விதையும், அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு மரக்கன்றும் தந்தனர். நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர்.

Organic Farming

Organic Farming

அனைவருக்கும் உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி. மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்கப் பட்டது. உழவர்களுக்கு ஒரே கருத்தாக ‘உங்கள் வயலில் உங்களுக்காண உணவை பாரம்பரிய நெல்லில் இயற்கை விவசாயம் செய்யுங்கள். விதைநெல்லை பாதுகாத்து இயற்கையை போற்றி வாழ்வோம்…’ என்று கூறினார்கள்.

குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் ‘பசுமை சிகரம் அறக்கட்டளை’ ‘எழில் இயற்கைவேளாண் பண்ணை’ யுடன் சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .