July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்
March 9, 2021

சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்

By 0 575 Views

Dhruv Vikram

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு இறுதியில், சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ‘பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன். அத்துடன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் உள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் – சிம்ரன் இணைந்து நடிக்கும் படமாக ‘சீயான் 60’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.