September 4, 2025
  • September 4, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிகின்றனர் – 18 வருட மண வாழ்க்கை முடிவு பெறுகிறது
January 17, 2022

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிகின்றனர் – 18 வருட மண வாழ்க்கை முடிவு பெறுகிறது

By 0 436 Views

நடிகர் தனுஷும், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். 

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.  இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.  ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.  

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதே கருத்தையே தனுஷும் தெரிவித்துள்ளார்.

தனுஷும், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அறிக்கைகள் கீழே…