தீபிகா படுகோன் நடித்த படம், ‘சபாக்’. எழுத்தாளர & இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்’ படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய பிராங் மாடலில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிரார்கள்.
அது இன்னமும் இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது .
அந்த விடியோவிலே ,சபாக் டீம் சிலர் வெவ்வேறு கடைகளுக்கு ஆசிட் வாங்கச் செல்கின்றனர். இதைக் காரில் இருந்தவாறு தீபிகா மற்றும் இரண்டு கமெரா கண்கள் கண்காணிக்கின்றனர்.
டீம் மெம்பர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்பதோடு, `அதனால் தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?’ என்றும் கேட்கின்றனர்.
இதில் , ஒரே ஒரு கடை உரிமையாளர் மட்டும், `அடையாள அட்டை காண்பித்தால்தான் ஆசிட் வாங்க முடியும்’ எனக் கூறுகிறார்.
வேறொரு லேடி சேல்ஸ் பண்ணும்போது, `இந்த ஆசிட் மற்றவங்க மீது வீசுவதற்காக வாங்கப்படுதா?’ என்று சர்வசாதாரணமாகக் கேட்கிறார்.
அதே சமயம், திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஒரு நடிகர், ஆசிட் வாங்குவதற்கான காரணத்தையும் கூறுகிறார். இதற்குக் கடை உரிமையாளர், `ஆசிட்டை மற்றவர்கள்மீது வீசப் பயன்படுத்த வேண்டாம்’ அப்படீன்னு சொல்லிட்டு ஆசிட் விற்கிறார்.
இந்த வீடியோவின் இறுதியில் தீபிகா படுகோன், 24 ஆசிட் பாட்டில்கள் மொத்தமாக வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் ஆசிட் வாங்குவதற்கு என விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதைப் பற்றி தீபிகா, “இப்படி எல்லாம் ஆசிட் விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சைத் தடுக்கவேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல. நாம் அனைவருமே சட்டவிரோதமாக ஆசிட் வாங்கப்படுவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அந்த வீடியோ கீழே…