October 17, 2025
  • October 17, 2025
Breaking News
July 10, 2020

கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்

By 0 637 Views

உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரசை 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன.

அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம்.

அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிச்சிருக்குது. அதாவது கடந்த மாதம் மட்டும் 628 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்போடு ஒப்பிடும்போது இந்த நிமோனியாவால் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் சீனா கவலை தெரிவிச்சிருக்குது.