January 23, 2026
  • January 23, 2026
Breaking News
April 29, 2021

கர்நாடகா ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தலைமறைவு

By 0 690 Views

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான நோயாளிகள் தலைமறைவாகி இருப்பதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் இருந்து வெளியேறிய அத்தனை பேரும் அ செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும், தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது கொரோனா பரவலை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால் தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா கேட்டுக்்கண்டிருக்கிறார்.

இதனிடையே, திருப்பதியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,049 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக அவர்கள் அளித்த தொலைபேசி எண், முகவரி ஆகியவை போலியானது என தெரியவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கிறது.