November 22, 2024
  • November 22, 2024
Breaking News
February 27, 2024

CMRL மற்றும் SIMS இணைந்து 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் தொடங்குகிறது..!

By 0 314 Views

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பிரத்யேக பலன்கள் வழங்கும் சிம்ஸ் மருத்துவமனை

சென்னை. பிப்ரவரி 27th 2024: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சிம்ஸ் மருந்தகத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்துகிறது. CMRL மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இரண்டும் இணைந்து தொடங்குகிறது. சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தக விற்பனை நிலையங்கள் தொடங்குவதன் மூலம் பயணிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அடிப்படையில் முதலாவதாக சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் சிம்ஸ் மருந்தகம் திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர். ராஜு சிவசாமி அவர்கள், திரு.T.அர்ச்சுனன் அவர்கள் IRSE – இயக்குநர் (Projects) CMRL மற்றும் திரு.ராஜேஷ் சதுர்வேதி,IRSEE இயக்குநர் (Systems & Operation) ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிம்ஸ் SIMS மருத்துவமனையின் நவீன சிகிச்சை முறைகள் போன்று SIMS மருந்தகமும் சிறப்பாக நவீன முறையில் செயல்படவிருக்கிறது. சிம்ஸ் மருந்தகம் Artificial intelligence (Al) தொழில்நுட்ப உதவியுடன் மருந்தகங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரத்தியேகமாக மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பின்வரும் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சிம்ஸ் மருந்தகங்கள் அனைத்து மருந்துகளையும் கொண்டு உரிய நேரத்தில் வீட்டிலும் டெலிவரி செய்வது, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கேற்ப அனுபவமிக்க வகையில் செயல்படுவது, தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சேவை செய்வது மற்றும் மருந்துகள் வழங்குவதில் பிழைகள் இல்லாமல் இருக்க, விரைவாக மருந்து சீட்டுகளுக்கு ஏற்ப மருந்துகளை வழங்க என தானியங்கி மருந்து செயலாக்கம் முறையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்ஸ் மருத்துவமனையின் ஹலோ டாக்டர் – ‘Hello Doctor’ சேவை என்பது முன்பதிவு பெறுவதற்கான வசதியான தளம் ஆகும். இதில் வீட்டில் இருந்தபடியே அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களை சந்திக்க திட்டமிடுவதற்கான நேரத்தை பதிவு செய்து சந்திக்கும் வாய்ப்பை முடியும். இதன் மூலம் முதியவர்கள், குழந்தைகள் நீண்ட நேரம் மருத்துவமனையில் தங்கி மருத்துவரை சந்திக்க காத்திருக்க வேண்டியிருக்காது.

இதே போன்று சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ‘Doctor on Wheels’ என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவர்கள் நோயாளியை சென்றடைய முடியும். இது நோயாளிகளுக்கு வசதியான ஒன்று என்பதோடு சிம்ஸ் மருத்துவமனையின் தரமான சுகாதாரமான மருத்துவ சேவை, நோயாளிக்கு அளிக்கவிருக்கும் உயர்தரமான சிகிச்சை முன்பை விட வேகமாக எளிதில் அணுக கூடிய வகையில் இருப்பதையும் உறுதி செய்யும். வழக்கமான உடல்நல பரிசோதனைகளில் விழிப்புணர்வோடு இருப்பவர்களுக்கும், ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு விரும்புபவர்களுக்கும் சிம்ஸ் மருந்தகங்களின் மூலம் இந்த நன்மை கிடைக்கும். இந்த ‘ Doctor on Wheels ‘ மூலம் சிம்ஸ் மருந்தகம் அனுபவமிக்க பயிற்சி பெற்ற செவிலியர்களால் நடத்தப்படும் முக்கிய மதிப்பீட்டு சோதனையை இலவசமாக வழங்கும் என்பது சிம்ஸ் மருத்துவமனையின் நவீன முயற்சி என்று சொல்லலாம்.

இதன் மூலம் சிம்ஸ் மருந்தகம் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக பிரத்யேகமாக சிகிச்சை தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் தனிப்பயனுடன் திறமையான சேவையை உறுதி செய்து அவர்களுக்கு முன்பதிவு முறையில் முன்னுரிமை அளிப்பதையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சென்னையின் மெட்ரோ நிலையங்கள் இயங்கும் அனைத்து மருந்தகங்களில் டெலி கன்சல்டேஷன் என்னும் மருத்துவ ஆலோசனை வழங்குவதையும் பெருமைபட தெரிவித்துகொள்கிறது சிம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவ ஆலோசனையில் உடல் ரீதியாக நோயாளி தொலைவில் இருந்தாலும் அவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான தேவையை மருந்துகளை இதன் மூலம் பெறமுடியும். இந்த டெலி கன்சல்டேஷன் சென்னையின் 40 இடங்களிலும் உள்ள மருந்தகங்களில் பொருத்தப்பட்டிருப்பதால் பயணிக்கும் போது உடனடி மருத்துவ ஆலோசனையை பெற்று தீவிர நிலையை தடுக்க முடியும். இதன் மூலம் பயணிகளின் ஆரோக்கியம் குறைபடாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர். ரவி பச்சமுத்து அவர்கள், எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் இது பற்றிக் கூறுகையில்.. “சென்னை மெட்ரோ நிலையங்களில் சிம்ஸ் மருந்தகங்கள் அமைப்பதன் மூலம் மெட்ரோ பயணிகள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் மருந்துகளை பெறுவதில் சிரமம் இல்லாமல் எளிதாக அணுக முடியும். பயணக்களைப்பு அதை தொடர்ந்து வீடு என்று வரும் போது மருந்து தேவையிருந்தாலும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மருந்துகளை சில நாட்கள் கூட தள்ளிப்போவதுண்டு. சமயங்களில் வேலை முடிந்து திரும்பும் போது அருகில் இருக்கும் கடைகள் மூடியிருக்கவும் கூடும். ஆனால் இனி அந்த கவலை பயணிகளுக்கு இருக்காது.

சென்னையின் 40 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இனி தடையின்றி நேர விரயமின்றி மருந்துகளை எளிதாக பெறமுடியும். இந்த புதுமையான திட்டத்தில் எங்களது சிம்ஸ் மருத்துவமனையை இணைத்து கொண்டதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். மருத்துவத்தில் நவீனத்தையும் நோயாளிகளை விரைந்து மீட்பதில் தரமான சிகிச்சையும் அளிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் நாங்கள் இனி மெட்ரோ பயணங்களில் பயணிக்கும் பயணிகளும் உடனடி அவசர நிலையில் விரைவில் மருத்துவ வசதியை அணுக கூடிய வகையில் செயல்பட விருப்பது மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. எங்களது மருத்துவ சிகிச்சையின் குறிக்கோளில் மேலும் ஒரு புதுமையான சிகிச்சை முறைக்கு ஆதரித்த சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் Chennai Metro Rail Limited (CMRL) இத்தருணத்தில் எங்களது நன்றி”.

டாக்டர். ராஜு சிவசாமி, சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் “அத்தியாவசிய சேவைகளில் மருத்துவ சேவைகளும் ஒன்று. மருத்துவம், மருந்துகள் கைக்கு எட்டாமல் இருக்க கூடாது. மெட்ரோ நெட்வொர்க்கில் சிம்ஸ் மருந்தகங்கள் செயல்படுவதன் மூலம் மெட்ரோ பயணிகள் தடையற்ற சுகாதார அனுபவத்தை பெறுவார்கள். அன்றாட பயணங்களின் போதும் ஆரோக்கியம் குன்றாமல் தடையின்றி பயணம் பெற இந்த மருந்தகங்களின் செயல்பாட்டை நோயாளிகள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக 40 மெட்ரோ நிலையங்களில் சிம்ஸ் மருந்தகங்கள் அமைப்பதற்கு மெட்ரோ ரயில் லிமிடெட் Chennai Metro Rail Limited (CMRL) உடன் இணைந்திருப்பதில் பெருமை அடைகிறோம். சிம்ஸ் மருத்துவமனையின் குறிக்கோள் தரமான மற்றும் நவீன சிகிச்சை என்பதே”.

அதை மேலும் சிறப்பாக்கும் வகையில் சிம்ஸ் மருந்தகங்கள் மூலம் மெட்ரோ பயணிகளுக்கு பிரத்யேகமாக பொதுவிடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் Master Health Check பரிசோதனையில் 20% ( குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு) தள்ளுபடி அளிக்கவும் இருக்கிறோம்..!”