October 16, 2025
  • October 16, 2025
Breaking News
November 11, 2020

முதல்வன் பட பாணியில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்

By 0 729 Views

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண்ணிற்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில், மாற்றுத்திறனாளியான தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம் காவல் நிலையம் அருகே வைத்து மனு ஒன்றை கொடுத்தார்.

அதை வாங்கிய முதல்வர் அந்த பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு சொன்னார். இதனை அடுத்து அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் உடனடியாக பணி ஆணை தயார் செய்து வழங்க வேண்டும் என்று அங்கு உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அவர்களின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் புற ஆதார முறைப்படி வார்டு மேலாளர் பணி வழங்கப்பட்டது.