October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு
June 16, 2020

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

By 0 829 Views
லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
 
இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர். பழனியின் வீர மரணத்திற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
 
தெலங்கானா ஆளுநர தமிழிசை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் உள்ளிட்டோரும இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு இட்டுள்ளார்.