October 27, 2025
  • October 27, 2025
Breaking News
July 28, 2020

ஜூலை 31க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா – 30ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

By 0 674 Views

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது.

ஆனாலும  கூட தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (ஜூலை 30) முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.