தமிழகம் முழுக்க வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
மழைக்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வரவேண்டிய சூழல் இருக்கிறது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் நன்றாக இருக்கிறது. எனவே வெங்காயத்தின் விலை தமிழகத்தில் இன்னும் 20 நாட்களில் குறைந்து விடும்” என்றார்.