எந்தப்படத்துக்கும் இல்லாத வகையில் 96 படத்தை நான்கு நாள்கள் முன்னாலேயே பத்திரிகையாளர் காட்சி போட்டார்கள். படமும் ‘செம’ என்ற அளவில் மீடியாக்களும் கொண்டாடிவிட, முன் பதிவுகள் முண்டியடித்து நிரம்ப, “அப்பாடா… படம் தப்பிச்சுது…” என்று படத் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பெருமூச்சு விட்ட வேளை… அவர் முற்பகல் செய்த வினை நேற்று பிற்பகலில் விஷால் வாயிலாக...
‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர்...
இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ்...