நேற்று மாலை வெளியிடப்பட்ட சாமி 2 படத்தின் திரையரங்க டிரைலர் ஒரே நாளில் இன்று மாலைக்குள் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழே டிரைலர்…
இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும்...
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்....
‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்.’ இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கலைஞர்களுடன் தன் சீடனுக்காக இயக்குநர் ராம் கலந்து கொண்டார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப்பட இயக்குநர் ‘மாரி செல்வராஜ்’என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்வில்...
சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதில் கலை இயக்குனர் முத்துராஜின் பங்கும் முதன்மையானது. அதற்காக குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். “சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவுதான். அவர் என்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில்...