ஊர் உலகுக்கே தெரியும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.ஸி தான் விஜய்யை ஹீரோவாக உருவாக்கினார் என்பது. அதற்கு ஈடாக உச்ச நடிகர் மற்ரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவில் தந்தைக்கு நன்றிக்கடனும் செய்துவிட்டார் விஜய். அடுத்த நன்றியாக அவர் “உழைத்தது போதும்… ஓய்வெடுங்கள்…” என்று அப்பாவுக்கு அன்பாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் கூட சொல்லிப் பார்த்தார்....
தமிழில் ஸ்போர்ட்ஸ் படங்கள் வருவதே அபூர்வம் என்றிருக்க, ‘வெண்ணிலா கபடிக்குழு’ மூலமாகவும், ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ படங்கள் மூலமாகவும் விளையாட்டு மற்றும் விளையாட்டின் அரசியல் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் நாளை ‘சாம்பியன்’ என்ற கால் பந்தாட்டப் படம் மூலம் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறார். கால்பந்தாட்டத்தை முன்வைத்து...
‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைகோர்வை, மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. இந்த இசை, ‘எக்ஸ் ஃபைல் தீம்’ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு...
பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் இன்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜய் அவர்களே! உங்களின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து....
சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்த போது’. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட வி.டி. ரித்திஷ்குமார் பேசும்போது,...