தமிழ் ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… முதுபெரும் இயக்குநர் எஸ்ஏசி இயக்கத்தில் இன்று வெளியாகும் ‘கேப்மாரி’ படத்தை எப்படியாவது பெரு வெற்றிபெறச் செய்ய மன்றாடி வேண்டுகிறோம்… எப்படிப்பட்ட இயக்குநர் எஸ் ஏ சி..? ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் சதாப்தி எக்ஸ்பிரஸ் போலக் கடந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியவர்....
‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி வெற்றி அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பெரிதாக கொண்டாடினார்கள். படத்தை வெற்றி பெறச்செய்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்லும் விழா...
ஊர் உலகுக்கே தெரியும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.ஸி தான் விஜய்யை ஹீரோவாக உருவாக்கினார் என்பது. அதற்கு ஈடாக உச்ச நடிகர் மற்ரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவில் தந்தைக்கு நன்றிக்கடனும் செய்துவிட்டார் விஜய். அடுத்த நன்றியாக அவர் “உழைத்தது போதும்… ஓய்வெடுங்கள்…” என்று அப்பாவுக்கு அன்பாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் கூட சொல்லிப் பார்த்தார்....
தமிழில் ஸ்போர்ட்ஸ் படங்கள் வருவதே அபூர்வம் என்றிருக்க, ‘வெண்ணிலா கபடிக்குழு’ மூலமாகவும், ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ படங்கள் மூலமாகவும் விளையாட்டு மற்றும் விளையாட்டின் அரசியல் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் நாளை ‘சாம்பியன்’ என்ற கால் பந்தாட்டப் படம் மூலம் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறார். கால்பந்தாட்டத்தை முன்வைத்து...
‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைகோர்வை, மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. இந்த இசை, ‘எக்ஸ் ஃபைல் தீம்’ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு...
பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் இன்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.