சந்தானம் படத்துக்கு எதற்காகப் போகிறோமோ அதை நன்றாகவே திருப்திப்படுத்தி அனுப்புகிற கதைக்களமும், அதைத் திறம்படக் கொடுத்திருக்கும் திரைக்கதையும் படத்தின் பலம். வீரமிக்க ஒருவரை மணக்க விரும்பும் பிராமணப் பெண்ணான நாயகி தாரா அலிசா, சந்தானத்தை அப்படி ஒரு மோதலில் பார்க்கிறார். அப்பாவின் விரதத்துக்காக தீர்த்தம் வாங்கிவர கோவிலுக்கு வந்த சந்தானம் நெற்றியில் நாமமும் போட்டிருக்க,...
கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை. ஊருக்கெல்லாம் அறிவு தரும்...
விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சற்குணம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் வில்லனாக இருந்தாலும் நேர்மையுடன் வந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஏற்றிருந்த வேடம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் களவாணித்தனம்...
‘தில்லுக்கு துட்டு 2’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘A1′. அக்கியூஸ்ட் 1 என்பதன் சுருக்கமான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்க, அறிமுக தயாரிப்பாளர் எஸ்.ரான் நாராயணன் சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் எப்போதும் போல சந்தானத்தின் காமெடி சரவெடியாக வெடித்தாலும், இதுவரை சந்தானம் ...
இலங்கையைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை டார் மோஷன் பிக்சர்ஸ் படமாகத் தயாரிக்கிறார்கள். இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. எம்.எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இந்தப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறும்போது… “எனது...
தமிழ்சினிமாவுக்கு வெற்றிபெறும் கனவுகளுடன் எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கனவு ஒன்றுதான் உறுதுணையாக இருக்கிறது. ஆனால், “உங்களுக்கு மனம் இருந்தால் போதும், வென்று விடலாம்…” என்ற மந்திரத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வருகிறார் ஒரு தன்னம்பிக்கை மனிதர். அவர் ஏ.எல்.சூர்யா. அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொண்டால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. சூர்யா யுடியூபில் பிரபலம். ‘பி...