இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னிமாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவர் கூறியதாவது…. இப்படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில்...
‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ போன்ற படங்களில் வலுவான காதலுடன் இயல்பான காமெடியைக் கலந்து கொடுத்து அவற்றை வெற்றிப்படங்களாக்கிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு அந்த வகையில் ‘ரொமாண்டிக் காமெடி’ புதிதல்ல. ஆனாலும், புதிய காதல் களத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் என்ற புதிய ஜோடியைச் சேர்த்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அவர் இன்னும் பெயரிடாத படத்தில்....
சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படம் நல்ல லைன் கிடைத்தும் சரியாக திரைக்கதை எழுதாத காரணத்தால் பிசிறடித்த கதை ஊருக்கே தெரியும். இந்நிலையில் படம் வெளியாக சில தினங்கள் முன்பு வழக்கமாக வரும் பஞ்சாயத்தான ‘இது என் கதை’ என்று எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் சொன்ன ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது சரிதானென்று...