என்ன செய்தால் சிம்புவை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று தயாரிப்பாளர்கள் வேதனை கொள்ளாத நாளில்லை. முக்கியமாக அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பெருத்த தலைவலி. அதனால், சிம்புவால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின....
சமீப காலமாக சினிமாவுக்கு சினிமாக்காரர்களே எதிரிகளாகி வருகிறார்கள். அல்லது சினிமக்கள் சினிமாக்கார்களை எதிரிகளாக்கிக் கொள்கிறது. தன் பாடல்களை அனுமதி பெறாமல் எடுத்தாள்பவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்றார் இளையராஜா. இருவாரம் முன்பு வெளியான ‘கோமாளி’ டிரைலர் ரஜினியைக் கிண்டலடிக்கிறது என்று அதை நீக்க வைத்தார்கள். இந்நிலையில் வைபவ் ஹீரோவாகும் ‘சிக்சர்’ படத்துக்கு புதுச் சிக்கல். ...
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து… “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை...
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம் பெற்றிருந்தது. அந்தப்படம் குறித்த போஸ்டருக்கு...