கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது. தங்கள் பூர்விக வீட்டை...
‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம். எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று கேட்கப்படாது. இப்படி இருக்கும் இளைஞர்களுக்கான படம்...
தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள். இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக...
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான்...