November 12, 2025
  • November 12, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • சொல் தமிழா சொல் 2025 – மாணவர்களின் பேச்சுத் திறமைக்கு அள்ளிக் கொடுத்த எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம்
January 27, 2025

சொல் தமிழா சொல் 2025 – மாணவர்களின் பேச்சுத் திறமைக்கு அள்ளிக் கொடுத்த எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம்

By 0 397 Views

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025 

Chennai , 27th January 2025 : எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ்ப் படிப்பு, வள்ளலார் சான்றிதழ்ப் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றிவருகிறது.

தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

அரும்பணிகள் பல ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சொல் தமிழா சொல் 2025 என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டியைத் தற்போது ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப் பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது.

முதல் மண்டலமாக சென்னை மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள், 15க்கும் மேற்பட்ட நடுவர்கள் என மிகப்பிரம்மாண்டமாகச் சென்னை மண்டலப் போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்றவாஂகௗினஂ விவரம் பின்வருமாறு

1. முதல் பரிசு – 1,00,000 ரூபாய் – எஸ். பாண்டி கணேஷ், சென்னை கிறிஸ்தவ கல்லூரி

2. இரண்டாம் பரிசு – 75,000 ரூபாய் – இல. சஞ்சனா, St. ஜோசப் பொறியியல் கல்லூரி

3. மூன்றாம் பரிசு – 50,000 ரூபாய் – சு. சதீஸஂகுமார், சென்னை பல்கலைக்கழகம்

சென்னை மண்டலப் போட்டியின் இறுதிச்சுற்று நடுவர்களாகப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று வெற்றியாளர்களைத் தெரிவுசெய்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்றோருக்குச் சான்றிதழ்களை கரு. நாகராஜன் President, தமிழ்ப்பேராயம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். வெற்றியாளர்களில் முதல் நால்வர் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறுவர்.

போட்டிகளில் வென்றோருக்கான பரிசுத்தொகை மாநில அளவிலான இறுதிப்போட்டி அன்று வழங்கப்படும்.

அடுத்த வேலூர் மண்டலத்திற்கான போட்டி 02.02.2023 அன்று திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.