August 30, 2025
  • August 30, 2025
Breaking News
March 4, 2025

க்ரோமா ஏசி மற்றும் ஏர் கூலர் சென்னையில் ஒரே நாளில் டெலிவரி..!

By 0 104 Views

மாலை 6 மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர்களைத் தேர்வு செய்து அதே நாளில் வீட்டில் டெலிவரியைப் பெறுங்கள்.

இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிக்க க்ரோமா ஒரே நாளில் நீங்கள் வாங்கும் ஏர் கண்டிஷனர்களை டெலிவரி செய்யும் ஏற்பாட்டைச் சென்னையில் செய்துள்ளது. மின்னணுப் பொருள்கள் மற்றும் சிறு மின் கருவிகளை உடனடியாக டெலிவரி செய்யும் க்ரோமாவின் வெற்றிப் பாதையில் இன்னொரு அம்சமாக உடனடியாக குளிர்சாதன வசதியைப் பெறமுடியக் கூடிய சலுகை இது.

ஒரே வழியில் தடையற்ற சேவையைப் பெறக்கூடிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு க்ரோமா செய்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்டர் கொடுத்த தினத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஏசி-கள் மற்றும் ஏர் கூலர்களை வீட்டுக்கு டெலிவரி செய்கிறது. உங்களுக்கு அருகேயுள்ள க்ரோமா கடைகளில் மாலை 6 மணிக்குள் ஆர்டர் செய்யலாம். அல்லது Croma.com என்ற க்ரோமாவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வாங்கலாம்.இவற்றோடு Tata Neu செயலி வழியாகவும் வாங்கலாம்.

க்ரோமாவின் இன்பினிட்டி ரீட்டெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு. சிபாஷிஸ் ராய் [Shibashish Roy, CEO, Infiniti Retail Ltd (Croma)] பேசும்போது, “கோடை மாத நாட்களின் உஷ்ணம் அதிகரிக்கும் நிலையில் க்ரோமாவின் சேவைகளை உங்களுக்கு நெருக்கமாக்கும் வண்ணம் நீங்கள் வாங்கும் ஏசிக்கள், ஏர்கூலர்களை அன்றைய தினமே டெலிவரி செய்யும் முயற்சி இது. 28 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யும் முறையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைறோம். இதை மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கவுள்ளோம்.” என்றார்.

இன்றே கோடைக் காலத்தின் உஷ்ணத்தை முறியடியுங்கள்! உங்கள் அருகிலுள்ள க்ரோமா கடைகளில் வாங்கிய அன்றே பயனடைய வாருங்கள். அல்லது Croma.com, Tata Neu இணையத்தளத்தில் வாங்குங்கள். வாங்கும் அதே தினத்திலேயே டெலிவரி பெறுங்கள். ஏசி-கள் மற்றும் ஏர் கூலர்களால் வீட்டைக் குளிராக்குங்கள். இனி எந்த தாமதமும் இல்லாமல் செளகரியமாக கோடையை சமாளிக்க தயாராகுங்கள்.