July 6, 2025
  • July 6, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்
March 1, 2021

நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்

By 0 549 Views

நடிகர் ஆர்யா கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக சொல்லப்பட்டது என்று சொல்லி பின் வாங்கியதில் அவர் மீது புகார் எழுந்தது.

இப்போது இதே பிரச்சினையை முன்வைத்து ஜெர்மனியிலிருந்து தமிழக அரசுக்கு பண மோசடி புகார் வந்திருக்கிறது.

ஆர்யா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அதை வைத்து தன்னிடமிருந்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு தன்னைத் திருமணமும் செய்து கொள்ளாமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண்ணான விட்ஜா புகார் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் மனுவை அவர் தமிழக அரசுக்கு ஈமெயில் மூலமாக அளித்துள்ளார். இதேபோல் இந்தியாவின் பிரதமர் அலுவலகத்திலும் இந்தப் புகாரை விட்ஜா பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தப் புகார் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.