November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 4, 2021

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு – முக்கிய செய்திகள்

By 0 955 Views

தமிழகத்தில் ஒரேநாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று – 144 பேர் உயிரிழப்பு.

சென்னையில் ஒரே நாளில் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.

ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர்.

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீச வாய்ப்புள்ளது.பகுதி நேர, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இருக்காது – எய்ம்ஸ் இயக்குநர்.

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் முக.ஸ்டாலின்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்  – திமுக தலைவர் முக.ஸ்டாலின்.

திமுக சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முக.ஸ்டாலின்.

முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, மூத்த திமுக தலைவர் ஆற்காடு வீராசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முக.ஸ்டாலின்.

பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவிடம் விரைவில் ஒப்படைக்கப்பட வேண்டும் – பிரிட்டன் பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி இன்று நடந்த உச்சி மாநாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

மே 31ஆம் தேதி வரை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் அரசாணை பொருந்தும் – தமிழக அரசு.

சென்னை அம்மா உணவகத்தில் தாக்குதல் 2 திமுக தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கம் – திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி.

திமுக வெற்றி பெற்றதற்காக காணிக்கையாக நாக்கை துண்டித்த பெண் தொண்டர்.செய்தியை கேட்டவுடன் நடுக்க முற்றேன் – திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம்.

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில்  8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா – மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்.

டெல்லியில் பொது முடக்கம் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.

மேற்குவங்க வன்முறை –  மம்தா பானர்ஜியை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு.

மேற்குவங்கம், தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகமும் பத்திரிக்கையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவித்தது.

ஜியோ, பிஎஸ்என்எல்,வோடபோன் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் கருவிகளை பயன்படுத்தி 5 ஜி சோதனைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் தனி செயலாளர் கொரோனாவுக்கு பலி.

ஐபிஎல் போட்டிகள் ரத்து – பிசிசிஐ அறிவிப்பு.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.