உதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை
அலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..!
சினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
அதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம்.
இந்த வருடம் இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘சஞ்சய் லீலா பன்சாலி’யின் ‘பத்மாவதி’ படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. படத்துக்குள் ‘பத்மாவதி’யாக வந்த ‘தீபிகா படுகோனே’ படத்தில் ‘ரத்தன் சிங்’காக வந்த ‘ஷாகித் கபூரை’…
Read Moreதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..!
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’.
சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் மட்டும் இந்தப்பாடலை இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.
போதாதா..? உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழு…
Read Moreசிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள்.
இதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார்.
“சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்து…
Read Moreஆண் தேவதை இயக்குநர் தாமிராவின் குமுறலைக் கேளுங்கள்…
தான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்…
“ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது.
திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வட்டிக்கு…
Read Moreமம்மூட்டியுடன் நடிக்க பயமில்லை தனுஷுடன் நடிக்கையில் பயந்தேன் – பாவெல் நவகீதன்
‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் தனித்துவமாக நடித்த பாவெல் நவகீதன் இப்போது ‘பேரன்பு’ படத்திலும், ‘வட சென்னை’யிலும் நடித்திருக்கிறார். தன்னைப் பற்றி அவர் கூறியது…
“எனது ஊர் செங்கல்பட்டு. அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆனாலும் படிப்பு ஏறவில்லை. எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VIS COM படிக்க வையுங்கள் என்றார்.
லயோலாவில் முயற்சி செய்தோம். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ‘சமூகவியல்’தான் கிடைத்தது. இரண்டாம்…
Read Moreபைரஸி தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து…
“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களைக் கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால், அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது…
Read Moreகுழந்தைக் கடத்தலைத் தடுக்க வரும் குஞ்சுமோன்..!
‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம்.
இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
காற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள்.
அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன், G. தனஞ்ஜெயன் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பாக பாடல்…
Read Moreசினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்
விஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.
“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.
சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு…
Read More