புன்னகை இளைவரசி தொடங்கி வைத்த புதிய கால் டாக்ஸி
பொங்கல் விழா பூஜையில் விபூதி வைத்துக்கொண்ட கமல் – அபூர்வ வீடியோ
பொள்ளாச்சி புரவிபாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல், அதன் ஒரு பகுதியாக நடந்த பூஜையில் கைக்கட்டியபடி நின்றிருந்தார்.
அப்போது மணியடித்து தீப ஆரத்தி எடுத்து பூஜை செய்த பூசாரி தீபத்தட்டை நீட்டியபோது இரு கரம் கூப்பி வணங்கிய கமல், பூசாரி விபூதியை எடுத்து அவர் நெற்றியில் வைத்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
அந்த அபூர்வ வீடியோ கீழே…
Read More
ஹைகோர்ட் புதிய உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு
பொங்கல் பரிசாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டது.
இதில் சிக்கல் என்னவென்றால் சர்க்கரை மட்டும் வாங்கும் ரேசன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந்தேதி…
Read Moreபிலிப்பைன்ஸ் வெள்ளம் 1 லட்சத்து 30 பேர் பாதிப்பு 75 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்ததில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.
கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் அனேக இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முற்றிலும் முடங்கியது.
வெள்ளம்,…
Read Moreசுரேஷ் மேனனின் கர்மா நமக்கு வருமானம் தருமாம்
ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக சுரேஷ் (சந்திர) மேனனை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு வெளியே தெரியாத பல முகங்கள் உண்டு. அதில் ஒரு முகம் புதிய ‘ஆப்’ உருவாக்கியிருப்பது. இப்போது அவர் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார்.
நான் 40 வருடமாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன்,…
Read Moreசஞ்சாரம் நாவலுக்காக 2018 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானார் எஸ்.ராமகிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருது இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதாகும். இது இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் உள்ளிட்டு பலவகையான எழுத்தாளுமைகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் 53 வயதான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி அவர் எழுதிய சஞ்சாரம் நாவல் இந்த விருதை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் தேர்வு இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 27 வருடங்களாக முழுநேர…
Read Moreசென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்
சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஐ.சி.எப்பில் தயராஜ ‘தேஜஸ்’ ரயில் பெட்டிகளைக் கொண்ட அதிநவீன ரயில் சென்னை – மதுரை இடையே பயணிகவிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 2-வது…
Read Moreநடிகர்களிலேயே முதன்மையாக கஜா பாதித்த கிராமத்தை தத்தெடுத்த விஷால்
கஜா நிவாரணமாக பல நடிகர்களும், கலையுலகைச் சேர்ந்தரவர்களும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொகையில் மாறுபட்டாலும் அவை பெரும்பாலும் பணமாகவோ, பொருள்களாகவோ தற்காலத் தேவைகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றன.
அவர்களில் ராகவா லாரன்ஸ் வித்தியாசப்பட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். இந்நிலையில் விஷால் ஒரு படி முன்னே போய் கஜாவால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
நாய் இறைச்சி வந்தது நட்சத்திர ஓட்டல்களுக்கா? பகீர் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். இது பற்றிய பகீர் விவரம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது
அதனையடுத்து இரண்டு தினங்கள் முன்பு காலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி சுகாதாரப்…
Read More