November 26, 2024
  • November 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

by by Mar 30, 2018 0

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம்.

“விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக…

Read More

ஆருத்ரா படத்தின் நாயகி மேகாலி புகைப்படங்கள்

by by Mar 22, 2018 0

Actress Meghali Photo Gallery

Read More

விஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்

by by Mar 20, 2018 0

தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். 

இந்த…

Read More

தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!

by by Mar 20, 2018 0

‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின்…

Read More

நடிகை சஞ்சனா புதிய போட்டோஷூட் கேலரி

by by Mar 20, 2018 0

Actress Sanjana Photoshoot Gallery

Read More

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

by by Mar 19, 2018 0

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.

இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’,…

Read More

விட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்

by by Mar 19, 2018 0

சினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும்.  அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள்.

ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து  விடுவார்கள்.

வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதுடன்,…

Read More

யாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை

by by Mar 19, 2018 0

‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம்.

ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை.

இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும்…

Read More

கேணி திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2018 0

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில்.

படத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் கணவரின்…

Read More

6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்

by by Mar 19, 2018 0

கடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான்  நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள்.

உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம்.

அதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி ‘கடைசிப்…

Read More