November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

by by Feb 1, 2019 0

அண்டா பாலாபிஷேக பிரச்சினை எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து காலைக்காட்சியில் சின்ன கட்டவுட், பால் பாக்கெட் அபிஷேகம் என்று கையடக்க கோலாகலத்துடன் இன்று சிம்பு நடித்திருக்கும் இந்தப்படம் ரிலீசாகி விட்டது.

சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிம்பு நடிக்கும் படம் எப்படியும் அவரது வாழ்க்கையை ஒட்டியே திரைக்கதை எழுதப்படும். இரண்டையும் சேர்த்தால் எதிர்பார்க்கப்பட்ட அதே டெம்ப்ளேட்டில் இந்தப்படம்.

மிகப்பெரிய செல்வந்தரான நாசரின் 80-வது வயது பிறந்த நாளுக்கு அவரது பேரன் தருவதாக சொல்லியிருக்கும் பிறந்தநாள்…

Read More

சார்லி சாப்ளின் 2 திரைப்பட விமர்சனம்

by by Jan 25, 2019 0

17 வருடங்களுக்கு முன் இந்தக் காமெடிப்படம் வந்தபோது இதன் இரண்டாவது பாகம் எடுப்போம் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அதே பிரபு, அதே பிரபுதேவா, அதே இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூட்டணி அமைத்து இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

என்ன ஒன்று, கால மாற்றம் பிரபுதேவாவை மட்டும் ஹீரோவாகவும், முந்னதில் அவரது நண்பராக வந்த பிரபுவை இதில் அவரது மாமனாராகவும் மாற்றியிருக்கிறது. அதேபோல் அதில் பிரபு ஒரு பொய் சொல்லப்போக, படம்முழுதும் பிரபுதேவா மாட்டிக்கொண்டு முழிப்பார். இதிலும் அதே…

Read More

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

by by Jan 13, 2019 0

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார்.

சரிதான்… ரஜினி…

Read More

விஸ்வாசம் திரைப்பட விமர்சனம்

by by Jan 10, 2019 0

அஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு. 

இதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன செய்தி வேறு. ஒரு அப்பாவாக ஒரு பெண்குழந்தையின் அன்புக்கு ஏங்கும் இந்தப் பாசப்படைப்பு அஜித் ரசிகர்களைத் தாண்டி பொதுவான குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சென்று சேரும்.

ஊர்த்திருவிழாவில் தொடங்கும் படத்தில்…

Read More

மாணிக் திரை விமர்சனம்

by by Jan 4, 2019 0

சினிமா உருவாக்கத்தின் பினனணியில் கதை விவாதம் என்பது முக்கிய அங்கம் வகிக்கும் விஷயம். அது ஏன் என்றால் ஒவ்வொரு காட்சியையும் கதை தகர்ந்து விடாமல் லாஜிக் கெட்டு விடாமல் உருவாக்குவதற்குதான். அதன்பின் ஷூட்டிங் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேலைதான். மேற்படி கதை விவாதம் மட்டுமே சரக்குள்ள ஸ்கிரிப்டையும், சரக்கில்லாத ஸ்கிரிப்டையும் தரம் பிரிக்கும் காரணியாகிறது.

அத்தனை முக்கியமான ‘கதை விவாதம்’ என்ற ஒரு அம்சத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்தப்பட ஸ்கிரிப்ட். இதன் இயக்குநர் ஒரு விஷயத்தில் உறுதியாக…

Read More

பிரான்மலை படத்தின் திரை விமர்சனம்

by by Dec 30, 2018 0

பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை.

காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும் ஆணவக்கொலை என்னும் அட்டூழியத்தைத் தொட்டு அந்தக் காதலை காவியமாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் அகரம் காமுரா.

பிரான்மலை ஊரில் பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மகன் வர்மன்தான் கதையின் நாயகன்….

Read More

மாரி 2 படத்தின் திரை விமர்சனம்

by by Dec 23, 2018 0

ஒரு படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியோ, அதன் சுவடுகளோ ஏற்படுத்தியிருந்தால்தான் அதன் இரண்டாவது பாகம் தயாரிப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகத்தில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏன் இரண்டாவது பாகம் தயாரித்தார்கள் என்பது முதல் கேள்வி.

தன் முதல் இரண்டு படங்களில் நம்பிக்கை வைக்கும் இயக்குநராக அடையாளம் தெரிந்த பாலாஜி மோகன் மூன்றாவது படத்தில் திடீரென்று கீழிறங்கி சுமாரான கமர்ஷியல் படத்தைக் கொடுத்துவிட்டு வேறு சிந்தனையே இல்லாமல் மீண்டும் அந்தப்படத்தின் இரண்டாவது…

Read More

கேஜிஎஃப் படத்தின் திரை விமர்சனம்

by by Dec 22, 2018 0

கருத்தளவில் ஆகச்சிறந்த படங்கள் கன்னடத்தில் தயாரானதுண்டு. ஆனால், அதிக பொருட்செலவில் மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஒரு படத்தைக் கன்னடத்தில் கேள்விப்பட்டதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படவுலகின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ‘இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறது கேஜிஎஃப் படக்குழு.

16 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோலார் தங்க வயல் பற்றிய கற்பனைக் காவியம்தான் இந்தப்படத்தின் கதை. இதை உண்மைக்கதை என்று சொல்வதற்கு அவர்களுக்கே கொஞ்சம் தைரியம் குறைவாகத்தான் இருக்கிறது என்பது ஆரம்பக்கட்ட காட்சிகளில் தெரிகிறது. இந்தக் கதையை…

Read More

கனா படத்தின் திரை விமர்சனம்

by by Dec 19, 2018 0

விளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும்.

அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’…

Read More

சீதக்காதி படத்தின் திரை விமர்சனம்

by by Dec 18, 2018 0

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். இது வழக்கமான விஜய் சேதுபதி படமல்ல… புதிய கதை சொல்லலில் அமைந்த புது முயற்சி என்பதைத் தெரிந்துகொண்டு யாரும் படம் பார்க்கப் போவது நலம்.

‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றொரு வழக்குச்சொல் உள்ளதல்லவா..? அதுதான் படத்தின் கதையும்…

கலையே உலகம் நடிப்பே உயிர் மூச்சு என்று வாழ்ந்த ‘அய்யா’ ஆதிமூலம் என்ற பழபெரும் நாடக நடிகர் இறந்தும் எப்படி வாழ்ந்தார் என்பதை சற்றே நீண்ட கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி…

Read More