November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

தேள் திரைப்பட விமர்சனம்

by by Jan 14, 2022 0

ஒரு அரக்கனின் மனதில் தாய்ப்பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம்.

இங்கு எடுக்கும் பல படங்களும் ஆங்கிலம், கொரியன் அல்லது இரானிய படங்களின் அப்பட்டமான காப்பிதான் என்றிருக்க, சிலர் மட்டுமே இங்கிருந்து உருவான கதை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். அப்படி கொரிய மொழிப்படம் ஒன்றின் எடுத்தாளல் இது என்பதைச் சொல்லியே படத்தைத் தொடங்கும் இயக்குநர் ஹரிகுமாரின் மனசாட்சிக்கு முதலில் வந்தனம் சொல்லி விடலாம்.

கோயம்பேடு சந்தையில் தொடங்கும் படத்தில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான தொழிலாக…

Read More

கார்பன் திரைப்பட விமர்சனம்

by by Jan 14, 2022 0

கொஞ்ச காலமாகவே ஹாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் வியாபித்து இருக்கின்றன. 

டைம் லூப் எல்லாம் இங்கே எடுபடுமா என்ற தயக்கததை மாநாடு வெற்றி துடைத்து எறிந்தது. ஆனால் இது அதற்கும் முன்பு திட்டமிடப்பட்ட படமோ என்னவோ, டைம் லூப் என்று கமிட் செய்து கொள்ளாமல் நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டமும் தான் கதை.

போலீசாக வேண்டும்…

Read More

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்

by by Jan 14, 2022 0

பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம். 

இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை.

நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது.

இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் சாதியும், மதமும்…

Read More

சினம் கொள் திரைப்பட விமர்சனம்

by by Jan 13, 2022 0

உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம்.

இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை உலகமே அறியும். அந்தப்போரில் பலர் சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமல் போயும் இருக்க, போரை அடுத்து ஈழம் எப்படி இருக்கிறது, தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை…

Read More

பூச்சாண்டி திரைப்பட விமர்சனம்

by by Jan 11, 2022 0

முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா ‘. அவரே கதையின் நாயகனாக இருக்கிறார்.

நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேகே…

Read More

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்

by by Jan 7, 2022 0

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது.

இளம் பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதேபோன்ற தற்கொலைகள் மேலும் ஒன்றிரண்டு  நடக்க போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அரவிந்த் என்ற வாலிபன் நந்தினியை காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள். இதற்கு இடையில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்கள் வீட்டு பாத்ரூமில் கேமராவை வைத்து படம் எடுப்பது காண்பிக்கப்படுகிறது.

ஒருகட்டத்தில் நந்தினிக்கு ஒரு இளைஞனால் செல்போன்…

Read More

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

by by Jan 6, 2022 0

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து 1940-இல் முதல் உத்தம புத்திரன் வெளிவந்தது. இதற்கெல்லாம் மூலம் 1939-இல் அலெக்ஸாண்டர் டூமா எழுதி ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த…

Read More

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் திரை விமர்சனம்

by by Jan 4, 2022 0

எந்த நேரத்தில் இப்படித் தலைப்பு வைத்தார்களோ பல வித பிளான்களுக்கு பிறகு இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.

ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோவும் பால சரவணனும் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் விழாவிற்கு நடனமாட ஒரு நடிகையை அழைத்து வருவதாக ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள். 

நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து தொலைந்து போக, பால சரவணனின் தங்கையும் காணாமல் போகிறாள்.

நிறுவனத்தில் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காததில் வேலை சிக்கலுக்கு உள்ளாக  ரியோவும், பால…

Read More

தண்ணி வண்டி படத்தின் திரை விமர்சனம்

by by Jan 3, 2022 0

‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி.
 
படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு இரண்டு பொருளும் உண்டு. மதுரையில் வண்டியில் தண்ணீர்  விநியோகிக்கும்  நாயகன் உமாபதி கையில் காசு புழங்கினால் நண்பன் பால…

Read More

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்

by by Jan 2, 2022 0

தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன்.

அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது.

தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில்…

Read More