May 17, 2024
  • May 17, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

நானே வருவேன் திரைப்பட விமர்சனம்

by by Sep 29, 2022 0

தனுஷை ஒரு நடிகராக அவரது அண்ணன் செல்வராகவன்தான் இனம் கண்டார். ஆனால் அதற்குப்பின் தனுஷ் ஒரு பெரிய நடிகராக வளர்ந்த போது அவருக்கான கதைகளை செல்வராகவன் படைக்கத் தொடங்கினார். அந்த பரிணாம வளர்ச்சியில் இப்போது வந்திருக்கும் படம்தான் ‘நானே வருவேன் …’

அந்த இணையற்ற அண்ணன் தம்பியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அண்ணன் தம்பி கதையை உள்ளடக்கியதுதான். 

இரட்டையர்களாகப் பிறந்து விட்ட பிரபுவும் கதிரும் முரண்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க அதில் கதிர்…

Read More

ட்ரிகர் திரைப்பட விமர்சனம்

by by Sep 25, 2022 0

மகன் தந்தைக்காற்றும் உதவியை பறைசாற்றும் படம். காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்குள் வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை.

காவல்துறை என்றால் இதுவரை போலீஸ் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், இன்ஸ்பெக்டர், ஏட்டு என்று தான் நாம் சினிமா வாயிலாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதே காவல்துறைக்குள் தவறு செய்யும் காவலர்களைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது என்ற உண்மையை இந்தப் படத்தின் மூலம் நம் முன்வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

அப்படி ஒரு…

Read More

பபூன் திரைப்பட விமர்சனம்

by by Sep 25, 2022 0

நலிந்து வரும் நாடகத்துறையில் கோமாளியாக இருக்கிறார் நாயகன் வைபவ். நாடகங்கள் குறைந்து வருவதால் இதிலிருந்து முன்னேற முடியாது என்று வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு இடத்தில் டிரைவர் பணியில் சேர்கிறார்.

உப்பை ஏற்றி வரும் அவரது வண்டிக்குள் போதை மருந்து இருக்க போலீசில் வகையாக சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து குற்றத்துக்கு மேல் குற்றமாக செய்து கொண்டிருப்பவர் கடைசியில் என்ன ஆனார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு ஆக்ஷன் கதைக்கு நாயகனாக இருப்பவர்…

Read More

ரெண்டகம் திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2022 0

“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே ..” என்ற ஒரு முதுமொழி இருக்கிறது. ஆக ரெண்டகம் என்றால் துரோகம் என்று அர்த்தம். யார், யாருக்கு எப்படி துரோகம் செய்தார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை.

காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் இருக்கும் குஞ்சாக்கோ போபன் அதற்கான பணம் ஈட்ட ஒரு அசைன்மெண்ட்டை மேற்கொள்கிறார். 

அதன்படி ‘அசைனர் ‘ என்கிற மும்பை தாதா, கடத்தல் தங்கத்தை  எடுத்துக்கொண்டு வரும் வழியில் நடந்த தாக்குதலில் கொல்லப்படுகிறார்…

Read More

டிராமா திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2022 0

ஒரே ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை சொல்வது என்பது அசுர சாதனை. அதில் ஒரு பிளாஷ்பேக்கும் அமைந்திருக்கிறது.

பார்த்திபன் ஏற்கனவே நான் லீனியரில் இப்படி ஒரே ஷாட்டில் படம் எடுத்திருந்தாலும் கிட்டத்தட்ட அதே சீசனில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது என்பதால் இதுவும் ஒரு அரிய முயற்சி என்று சொல்ல முடியும்.

இந்த சாதனையை சிறு குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாகக் கடந்து முடித்திருக்கிறார் இயக்குநர் அஜு கிழுமலா.

ஒரு சிற்றூரில் காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு சில நிமிடங்கள் மின்சாரம்…

Read More

ஆதார் திரைப்பட விமர்சனம்

by by Sep 23, 2022 0

பன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது. 

அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை.

கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி பிரபாகர்…

Read More

குழலி திரைப்பட விமர்சனம்

by by Sep 23, 2022 0

இப்படி ஒரு படம் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு என்று நினைக்க வைக்கும் படம். 

மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும், உணர்ச்சியுமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரா. கலையரசன்.

தென் மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. டைட்டில் போடும்போது அந்த கிராமம் என்ன விதமான சாதிய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட்ட…

Read More

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம்

by by Sep 17, 2022 0

இலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார்.

அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை இவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை. அந்த வகையில் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்து இருக்கிறார்கள்.

இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் ஒன்று சேரும்போது என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது.

தென் மாவட்ட…

Read More

சினம் திரைப்பட விமர்சனம்

by by Sep 16, 2022 0

அனுபவ நடிகர் விஜயகுமார் தன்மகன் அருண் விஜய்க்காக தயாரித்திருக்கும் படம் இது. அப்பாவைப் போலவே சினிமா துறையில் நல்ல பெயர் எடுத்த அருண் விஜய் திறமையிலும் அவருக்கு குறைந்தவர் இல்லை என்று இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.

ஏற்கனவே அழகியலோடு அருமையான படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கி இருக்கும் படம் இது என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம்.

அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் முதல் காட்சியில் இருந்து பரபரப்பின் பக்கம்…

Read More

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

by by Sep 11, 2022 0

புதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும்.

இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தை ஏற்ற அளவில் சாயா சிங்கைப் பாராட்டலாம்.

ஒரு பாலியல் தொழிலாளியாக வரும் அவருக்கு முன் நிற்கும் சவால் என்னவென்றால் அவருக்கு…

Read More