May 4, 2024
  • May 4, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2022 0

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார்.

வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள், தாங்கள் வளர்க்கும் நாயைக் காணவில்லை என்றால் சாப்பாடு, தூக்கம் இன்றித் தவிப்பார்கள்.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் இருந்து நாயைக் கிட்னாப் செய்து கொண்டு போய், அதற்கு…

Read More

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2022 0

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த்.

இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த அச்சகத் தொழிலையே தானும் கற்றுக்கொண்டு அதில் மேம்பாட்டை கொண்டு வந்த விஜய் சங்கேஸ்வர், அந்த வளர்ச்சியிலும் திருப்தி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி அதை…

Read More

குருமூர்த்தி திரைப்பட விமர்சனம்

by by Dec 9, 2022 0

நாம் அறிந்த திருடன் போலீஸ் கதையை கமர்சியல் கலந்து மசாலா வேர்க்கடலை சுவையில் படமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். .

இதில் போலீஸ் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அது நட்ராஜ் என்கிற நட்டி. அவர்தான் குருமூர்த்தி.

கதை இதுதான்.

ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்லும்போது, அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.

அங்கே சிறு…

Read More

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

by by Dec 3, 2022 0

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா.

இது ஒரு வரி கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு தொடர்கள் கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இந்த விசாரணையின் இன்று இடுக்கு எல்லாம் பயணப்பட்டு விழா வாரியாக தொடர்…

Read More

கட்டா குஸ்தி திரைப்பட விமர்சனம்

by by Dec 3, 2022 0

டைட்டிலை பார்த்ததும் “இப்படி ஒரு படமா..?” என்று சலித்துக் கொள்ளத் தோன்றலாம். ஆனால் படத்தைப் பார்த்தாலும் “இப்படி ஒரு படமா..?” என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இதன் பொருள் வேறு.

தமிழில் கே.பாக்யராஜை திரைக்கதை ஜாம்பவான் என்பார்கள். அவருக்குப் பின் பல திரைக்கதை ஆசிரியர்கள் அற்புதமான திரைக்கதைகளைத் தந்திருந்தாலும் பாக்கியராஜின் இடம் அப்படியேதான் இருப்பதாக தோன்றுகிறது. அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் இந்த பட இயக்குனர் ‘செல்லா அய்யாவு’ எனலாம்.

அந்த அளவுக்கு ஒரு குடும்ப கதையை நகைச்சுவை…

Read More

பட்டத்து அரசன் திரைப்பட விமர்சனம்

by by Nov 28, 2022 0

தலைவர்களுக்கே இறந்த பின்தான் சிலை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் கபடி போட்டியில் தங்கள் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பொத்தாரி என்ற நபருக்கு அவரது ஊரில் சிலை வைக்கிறார்கள் தஞ்சைப் பகுதி மக்கள்.

பிறகு அவர் மீது கொண்ட கசப்பால் அவர் உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிலையை ஊர் மக்கள் உடைத்து எறியவும் செய்கிறார்கள். அவர் குடும்பத்தையே ஊருக்கு ஆகாதபடி செய்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவர் மீது என்ன கோபம்..? இந்த சிக்கலை அவர் குடும்பம்…

Read More

கெத்துல திரைப்பட விமர்சனம்

by by Nov 28, 2022 0

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் அரிதாகவே இங்கே நிகழ்ந்திருக்கிறது.

இயல்பான கதை ஓட்டத்தில் சில… கமர்சியல் கதையோட்டத்தில் சில… இதில் அனேக திருப்பங்கள் நிறைந்த கமர்ஷியல் திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

கதை இதுதான்…

ஒரு அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடு இளைமைத் திமிருடன் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு பலியாக்குவது வழக்கமாக இருக்க, மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரிரீனுவையும் அதே நோக்கத்தில் அணுகுகிறார்.

ஆனால் அவர் செய்த புண்ணியம், அவரை அந்த நேரத்தில் அங்கிருந்த நாயகன் ஸ்ரீஜித்…

Read More

பவுடர் திரைப்பட விமர்சனம்

by by Nov 28, 2022 0

பவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான்.

உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை தோலுரித்துக் காட்டும் படம் இது.

ஒரே இரவுக்குள் நடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றோடு ஒன்று எப்படி பின்னிப் பிணைந்து கிடைக்கின்றன என்பதுதான் இயக்குனர் மேற்கொண்டிருக்கும் சவால்.

ஒரு கதை இழையில்,…

Read More

காரி திரைப்பட விமர்சனம்

by by Nov 24, 2022 0

காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது.

ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய மான விளையாட்டு என்பதோடு நின்று விடாமல் அதன் மூலம் இரண்டு ஊர்களுக்குள் எப்படியான உடன்பாடு இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையும், ஜல்லிக்கட்டு காளைகளை…

Read More

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

by by Nov 19, 2022 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’

அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம்…

Read More