May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

பகாசூரன் திரைப்பட விமர்சனம்

by by Feb 20, 2023 0

தன் முந்தைய இரண்டு படங்களின் மூலம் பரபரப்பைக் கிளம்பிய மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் இது என்பதாலும், செல்வராகவன் கதை நாயகனாக நடித்திருக்கும் காரணத்தாலும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது.

ஆனால், இன உணர்வைத் தூக்கிப் பிடிக்கும் வழக்கமான அவரது பாதையில் இருந்து விலகி பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அவர்.

ஆரம்பக் காட்சியே முழு வீச்சில் தொடங்குகிறது. ஒரு இளம் பெண்ணை நடுத்தர வயதுள்ள மனிதர் காட்டுக்குள் கொண்டு வந்து பாலியல் உறவுக்கு…

Read More

வாத்தி திரைப்பட விமர்சனம்

by by Feb 18, 2023 0

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டிய கல்வி, எப்படி தனியார் முதலாளிகளிடம் சிக்கி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போனது என்பதைச் சொல்லி இருக்கும் படம். 

படத்தின் தொடக்கம் மிக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொறியாளராக விரும்பும் ஒரு மாணனின் தந்தை அவன் கல்விச் செலவுக்காக அவர்களுடைய வீடியோ கடையை விற்கப் போக, அங்கு கிடைக்கும் ஒரு வீடியோ கேசட்டின் மூலம் திறமை மிக்க ஒரு கணக்கு வாத்தியாரைப் பற்றி அந்த மாணவனால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவரைப்…

Read More

வர்ணாஸ்ரமம் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2023 0

படத்தின் தலைப்பபே கதையைச் சொல்லிவிடும். சாதிப்பிரச்சினைதான் கதையின் அடிநாதம். அதிலும் ஆணவக் கொலையை முன்னிறுத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி.

படத்தின் தொடக்கத்தில் நான்கு ஜோடி காதல் கதைகளுக்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. அந்த கதைகள் என்ன ஆயின… எப்படி முடிந்தன என்பதுதான் படத்தின் கதை.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் ஆணவக் கொலைகள் பற்றி ஆன்லைன் மூலம் அறிந்த அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டே, இந்தியா வந்து அவற்றைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்து மக்களிடையே விழிப்புணர்வு…

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by by Feb 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம்.

அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது.

அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

மூலத்தின்…

Read More

மெய்ப்பட செய் திரைப்பட விமர்சனம்

by by Jan 26, 2023 0

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தொடர்ந்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களில் சில சம்பவங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் இறந்து விடுவதும் உண்டு.

ஆனாலும் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாக இருக்க பாதிக்கப்பட்டவர்களின் நிலை இந்த சமூகத்தில் வாழ முடியாத அளவில் இருக்கிறது.

என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் தப்பித்து விடுவதால் இப்படிப்பட்ட பாலியல்…

Read More

அயலி வெப் தொடர் (Zee 5) விமர்சனம்

by by Jan 26, 2023 0

தமிழில் வெப் தொடர்கள் வர துவங்கியதும் அவற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று… சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஜீ5 (Zee 5) தளம்தான்.

ஜீ 5 தயாரிப்பில் இப்போது ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கும் தொடர்தான் ‘அயலி.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பல படங்கள் வந்திருந்தாலும் அதை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கும் தொடர் இது.

1990- ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வீரப்பண்ணை என்ற கிராமத்தில் நடக்கும் கதையாக இது சொல்லப்பட்டிருக்கிறது….

Read More

துணிவு திரைப்பட விமர்சனம்

by by Jan 12, 2023 0

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வங்கிகள் பொதுமக்களை எப்படி கொள்ளை அடிக்கின்றன என்று சொல்லி இருக்கும் படம் இது. அதை அஜித் இருக்கும் தைரியத்தில் துணிவுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச். வினோத்.

கெட்டப் அளவில் படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார் அஜித். ஆரம்பத்தில் இந்தப் பட கெட்டப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் பார்க்கும்போது, இது ‘வேற லெவலில்’ இருக்கிறது.

இந்தியத் திரையுலகில் முதன் முதலில் ஒரு ஹீரோ சால்ட்…

Read More

வாரிசு திரைப்பட விமர்சனம்

by by Jan 11, 2023 0

காலம் காலமாக சினிமாவில் கழுவிக் கழுவி காயப் போட்டுக் கொண்டிருக்கும் கதை. வீட்டுக்கு ஆகாதவன் என்று அப்பாவாலும் சகோதரர்களாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிள்ளை கடைசியில் தான் மட்டுமே அந்த குடும்பத்தின் வாரிசு என்று நிரூபிக்கும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கதை.

மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாரின் மூன்று மகன்களில் கடைசி மகன்தான் விஜய். (அட… படத்திலும் அவர் பெயர் விஜய்தாங்க). மற்ற இரண்டு பிள்ளைகளும் அப்பாவின் சொல்கேட்டு அவரது தொழிலை கவனித்துக் கொண்டிருக்க, தன் சொந்தக்காலில் சுய விருப்பப்படி…

Read More

V3 திரைப்பட விமர்சனம்

by by Jan 6, 2023 0

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை வைத்து நிறைய படங்கள் வந்து விட்டன. பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்களுக்கும் ரகம் ரகமான தண்டனைகள் கொடுத்தாயிற்று.

அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என்றாலும் இதில் ஒரு வித்தியாசமான முயற்சியாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

அது சரியா இல்லையா என்று இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது படம்.

இரண்டு பெண்களின் தந்தையாக இருக்கிறார் ஆடுகளம் நரேன். அவர்களில்…

Read More

கடைசி காதல் கதை திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2023 0

80, 90 கிட்ஸ் காலத்தில் காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்துக் கொண்டு பாடித் திரிவார்கள் – அல்லது மரணிப்பார்கள். இந்த 2கே கிட்ஸ் காலத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம் இந்தப் படம்.

தன் காதலி தனக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் பொறுக்க முடியாத நிலையில் காதல் தோல்வியுற நிறைய புத்தகங்கள் படித்து, காதலில் தோல்வி ஏற்படாமல் இருக்கவும் மனிதர்களிடத்தில் பேதங்கள் இல்லாமல் வாழவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார்.

அது ஆதி மனிதர்கள் வாழ்ந்தது…

Read More