May 5, 2025
  • May 5, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்பட விமர்சனம்

by by Aug 21, 2024 0

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் நல்லது, கெட்டதுகளை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒரே ஒரு பயணத்தில் நமக்கு விளக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா.

பிண ஊர்தி ஓட்டி வாழ்க்கை நடத்தும் விமல், அபலைப் பெண்ணான மேரி ரிக்கெட்ஸ்சுக்கு வாழ்க்கை கொடுக்க அதன் காரணமாக கர்ப்பமாகிறார் மேரி. இரண்டு முறை கர்ப்பம் தரித்து உயிரற்ற குழந்தைகளைச் சுமந்து மூன்றாவது தரிக்கும் கர்ப்பம் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த, அதற்காக பிரசவத்தைத் தன் வசதிக்கு மேலான…

Read More

டிமான்டி காலனி 2 திரைப்பட விமர்சன

by by Aug 17, 2024 0

டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியின் விளைவாக அதன் இரண்டாவது பாகத்தை எடுத்து நம்மை பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள். 

கதை இப்படித் தொடங்குகிறது.

நண்பர்களுடன் தற்கொலை செய்து கொண்ட கணவரின் மர்ம மரணத்தை நினைத்து  துக்கத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார்.

அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்படும் அருள்நிதியை…

Read More

தங்கலான் திரைப்பட விமர்சனம்

by by Aug 15, 2024 0

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இந்தப் படத்தின் முதல் பார்வையே மிரட்டியது. அந்த வகையில் தங்கலான் தரத்தை சற்றே உரசிப் பார்ப்போம்.

19ஆம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வட ஆற்காடு மாவட்டப் பகுதியில் நடக்கிறது கதை.

அந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற நினைத்த வெள்ளைக்காரர் ஒருவர் அங்கிருக்கும் பண்ணையில் வேலை செய்பவர்களை அரசாங்க அச்சுறுத்தலைக் காட்டி அழைத்துச் செல்கிறார்.

இந்நிலையில் அந்த மலைப்பகுதியில்…

Read More

வேதா திரைப்பட விமர்சனம்

by by Aug 15, 2024 0

வடமாநில கிராமங்களில் அதிகமாக இருக்கும் சாதிக் கொடுமை பற்றிய கதைக்களம்.

அப்படி ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட பெண்ணாகப் பிறந்து குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஆசைப்பட்ட நாயகிக்கு என்னவெல்லாம் அழுத்தங்கள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து வந்தன என்பதையும் அவற்றையெல்லாம் ஒரு ராணுவ வீரரின்  உதவியுடன் எப்படி எதிர்கொண்டு போராடினார் என்பதுதான் கதை.

நாயகனாகியிருக்கும் ஜான் ஆபிரகாம் தனது பாத்திரத்தை இயல்பாக நடித்த கடந்து இருக்கிறார். அவரது முறுக்கேறிய உடலுக்கு ஏற்றவாறு இராணுவ வீரரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அதிக…

Read More

அந்தகன் திரைப்பட விமர்சனம்

by by Aug 9, 2024 0

எல்லா உணவுகளிலும் ஒரே வகை உணவுப் பொருள்கள்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அதனதன் அளவு தெரிந்து, உணவைச் சமைக்கும் போது அது அறுசுவை உணவாகவோ சுவையற்ற உணவாகவோ மாறுகிறது. 

அப்படி, சரியான விகிதத்தில், சரியான சுவைகளைச் சேர்த்து சரியான பதத்தில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவாகி இருக்கிறது இந்த அந்தகன்.

கொஞ்சம் இடைவெளி விட்டு டாப் ஸ்டார் பிரசாந்தை இந்தப் படத்தில் பார்க்கிறோம். நடனம், சண்டை என்று அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றாலும் இந்தப் படத்தைப் பொருத்தவரை கதைதான் நாயகன்…

Read More

வீராயி மக்கள் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2024 0

‘உடன்பிறப்புகளுக்குள் பிரிவு வருவதும் பின்பு அவர்கள் உறவாடுவதும் உலக வழக்கம். ஆனால் பிரிந்த உறவுகளைச் சேர்ப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல..!’ என்பதை மண் மணத்தோடு இன்னொரு முறை சொல்லி நம்மை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் நந்தாவே படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு ஹீரோவுக்குரிய அறிமுகம் ஆட்டம், பாட்டு என்றெல்லாம் இல்லாமல் சராசரி குடும்ப உறுப்பினராக அவர் வருவது இயல்பாக இருக்கிறது.

அறந்தாங்கியில் நடக்கிற கதையில் வேல.ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் உடன் பிறந்த…

Read More

பார்க் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2024 0

வழக்கமாக படங்களில் ஒன்று நாயகனை ஆவி பிடிக்கும். அல்லது நாயகி மேல் ஆவி பீடிக்கும். ஆனால் இந்தப் பட இயக்குனர் இ.கே.முருகனுக்கு ஆவிகளை  ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அதனால் இரண்டு ஆவிகளை நாயகன், நாயகி இரண்டு பேரின் மேலும் ஏற்றிவிட்டு அழகு (!) பார்த்திருக்கிறார்.

நாயகன் தமன் குமாரும், நாயகி ஸ்வேதா டோரத்தியும் Made for each other ஜோடியாகப் பொருந்திப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் அடிக்கடி அவர்கள் சந்தித்துக்…

Read More

நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

குழந்தைப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஒரு குழுவினரின் ஆசைகள், பாசம், காதல், நட்பு, பிரிவு, ஏமாற்றம், வெற்றி எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.

ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், யூ ட்யூபர் இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ்தான் அந்த நட்புக் குழு.

கல்லூரி முடித்ததும் எல்லோரும் தனித்தனியாக வேலைக்குப் போவதை விடுத்து இதேபோல் ஒரு குழுவாக இன்றைய நவீனத்துவத்திற்கு ஏற்றாற்போல் தொழில் தொடங்கலாம் என்று ஆனந்த் ஒரு…

Read More

பேச்சி திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

ஹாரர் என்கிற அமானுஷ்யப் படங்கள் எடுத்தால் ஓடாது என்று ஒரு நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. பிறகு அதுவே நேர்மறை ஆகிப் பேய் படங்கள் நன்றாக ஓடத் தொடங்கின. அதிலும் ஹாரர் காமெடிப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. 

அதனால் ஹாரர் படங்களை சீரியஸாக சொல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்த நேரத்தில் முழு ஹாரர் ஃபேண்டஸி என்கிற அளவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்.

மலைக்காட்டுப்பகுதிக்கு காதலியை தள்ளிக் கொண்டு போகும் ஒருவர்…

Read More

வாஸ்கோடகாமா திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

“வாஸ்கோடகாமான்னா ஒரு ஆளுன்னு நினைச்சியா, அதுதான் இல்ல..!” என்று ஒரு படத்தை நம் முன்னால் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

அப்படி ஒரு அஜால் குஜால் கதை. இந்தக் கலியுகத்தில் நல்லவர்கள் வேடத்தில் கெட்டவர்களும் கெட்டவர்கள் வேடத்தில் நல்லவர்களும் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்த கலியுகத்தைத் தாண்டி அடுத்த யுகம் எப்படி இருக்கும் என்றால், எல்லோரும் கெட்டவர்களாகவும் கெட்டதே ஆட்சி செய்வதாகவும் இருக்கும் என்கிறார் இந்தப் பட இயக்குனர். 

அப்படி அவர் யோசித்து எழுதி இருக்கும் கதை தான்…

Read More