December 27, 2024
  • December 27, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

நீட் 2018 தேர்வு முடிவால் இருவர் தற்கொலை

by by Jun 5, 2018 0

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் வந்துவிட்டாலே உயிர்ப்பலி கேட்பது வழக்கமாகி விட்ட நிலையில் நீட்டின் தேர்வு முடிவுகளும் உயிர்களை பலி வாங்க ஆரம்பித்துவிட்டன.

2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் தோல்வியடைந்த தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த எச்.ப்ரதீபா மனம் விரக்தியடைந்து எலிக்கு வைக்கும் விஷத்தை அருந்தி உயிர்விட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12ம்வகுப்பில் 1200 க்கு 1125 எடுத்துத்…

Read More

ஏமன் புயலில் சிக்கிய இந்தியர்களை மீட்ட சுனைனா

by by Jun 3, 2018 0

‘மெகுனு’ புயலில் சிக்கி இந்தியர்கள் மூவர் உள்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது.

மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக இந்திய அரசுக்குத்…

Read More

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by by Jun 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்..

கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார்.

ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக…

Read More

எங்கள் போராட்டத்தை ரஜினி இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் – சந்தோஷ்ராஜ்

by by May 31, 2018 0

நேற்று ரஜினியின் தூத்துக்குடி வருகையின்போது அங்கு மருத்துவமனையின் சிகிச்சை பெறும் சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ரஜினியிடம் “நீங்கள் யார்..? எங்கிருந்து வருகிறீர்கள்..?” என்று கேட்ட கேள்வி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது.

ரஜினியைத் திகைக்க வைத்த அந்தக் கேள்வியைக் கேட்ட சந்தோஷ்ராஜ் பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு சென்றபோதுதான் ரஜினிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. இது…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by by May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 கோடி…

Read More

ஐபிஎல் 2018 சென்னை அணி 3 -வது முறை சாம்பியன்

by by May 27, 2018 0

11-வது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.

இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில்…

Read More

மே 28-ல் 50 சதவிகித கட்டண சலுகை தரும் நியூ ஹோப்

by by May 26, 2018 0

மே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்துப் பெண்களுக்கும் 50 சதவீதம் அளவிற்கான கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது சென்னையில் இயங்கி வரும் ‘நியூஹோப் மருத்துவமனை.’

இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன் ஹெர்குலீஸிடம் கேட்டபோது, “1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் தேதியன்று அனைத்து வயதிலும் உள்ள மகளிருக்கான…

Read More

சென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்

by by May 25, 2018 0

சென்னையில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் 28 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.. சென்ட்ரலில் இருந்து விமான…

Read More

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகம் துண்டிப்பு

by by May 24, 2018 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில், இன்று முதல் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியபோது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதில் பத்து பேர் சம்பவ இடங்களிலேயே பலியாக, நேற்று…

Read More

நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 3 பேர் பலி… தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை

by by May 21, 2018 0

பொதுவாக வவ்வால்களின் சிறுநீர், உமிழ்நீரிலிருந்து உருவாகும் உயிர் கொல்லியான ‘நிபா வைரஸ்’ 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. இந்த வைரஸின் அச்சம் இப்போது இந்தியாவில்… குறிப்பாக கேரளாவில் பரவியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துளார்கள். இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ‘நிபா’ வைரஸ் பரவியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

Read More