July 12, 2020
  • July 12, 2020
Breaking News

Currently browsing மருத்துவம்

கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்

by by Jul 10, 2020 0

உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரசை 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன.

அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம்.

அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிச்சிருக்குது. அதாவது கடந்த மாதம் மட்டும்…

Read More

கொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ

by by Jul 7, 2020 0

நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார்.

இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள்.

பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக அணியாமல் கழுத்தில் மாட்டியபடி ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றனர்.

அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல. அதற்காக சவுதியில்…

Read More

கொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை

by by Jul 6, 2020 0

சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின்  இரண்டாவது அலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
 
இந்நிலையில கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம் சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு…

Read More

ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

by by Jul 3, 2020 0

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

COVAXIN - vaccine for Covid 19 COVAXIN – vaccine for…

Read More

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் ஜெர்மன் நிறுவனம் முந்துகிறது – பரிசோதனைக்கு தயார்

by by Jun 23, 2020 0

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற ( பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ) நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

ஜெர்மானிய டியுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.

இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதை  பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.

இன்னும் 2 மாதங்களில்…

Read More

எச்சரிக்கை ரிப்போர்ட் – வெஸ்டர்ன் டாய்லட் மூலம் கொரோனா பரவும்

by by Jun 17, 2020 0

மேற்கத்திய கழிவறை (western toilets) யின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல் இதழில் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கணினி மாதிரிகள் பயன்படுத்தி ஒரு…

Read More

கொரோனா நோயாளிகள் மோசமாக கையாளப் படுகின்றனர் – உச்ச நீதி மன்றம்

by by Jun 12, 2020 0

இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகின்றது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

“கொரோனா…

Read More

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

by by May 6, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
 
தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர்…

Read More

விஷால் தங்கை நீஷ்மா செய்த கொரோனா சேவை

by by May 3, 2020 0

நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்துு வருகிறார்.

இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி இருக்கிறார்.

இதனை அறிந்த விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

Read More

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை

by by Apr 26, 2020 0

நாள்: 26.04.2020

இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும்,பயிற்சி மருத்துவர்களின்,
பட்ட மேற்படிப்பு மாணவர்களின் நலன் காத்திடுக.

தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.

சென்னை மருத்துவக் கல்லூரி பயற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக விடுதியிலேயே முடக்கப் பட்டுள்ளனர்.இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனால் ,பயிற்சி மருத்துவர்களும், அவர்களின்
பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

முதுநிலை மருத்துவ மாணவர்களும் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை இராஜிவ்…

Read More