ஐந்து நடிகைகள் ஜோடி சேரும் அதிர்ஷ்டக்கார அங்காடித்தெரு மகேஷ்
பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.
என்னுடன் நடித்த ரவீனாவுக்கு நிறைய தொந்தரவு கொடுத்தேன் – விஷால்
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது
நடிகர் மாரிமுத்து பேசும்போது…
“விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கு.
விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை…
Read More
இயக்குனர்களின் வரப்பிரசாதம் கார்த்தி – விருமன் ஹை லைட்ஸ்
நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தை முத்தையா இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது.
கார்த்தியுடன் அறிமுகமாகும் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
“என் எதிர்த்த வீட்டில் நடந்த…
Read More
என்ன சொல்லப் போகிறாய் திரைப்பட விமர்சனம்
சிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்)
அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான்.
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது என்றுதான்…
Read More
தேள் திரைப்பட விமர்சனம்
ஒரு அரக்கனின் மனதில் தாய்ப்பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம்.
இங்கு எடுக்கும் பல படங்களும் ஆங்கிலம், கொரியன் அல்லது இரானிய படங்களின் அப்பட்டமான காப்பிதான் என்றிருக்க, சிலர் மட்டுமே இங்கிருந்து உருவான கதை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். அப்படி கொரிய மொழிப்படம் ஒன்றின் எடுத்தாளல் இது என்பதைச் சொல்லியே படத்தைத் தொடங்கும் இயக்குநர் ஹரிகுமாரின் மனசாட்சிக்கு முதலில் வந்தனம் சொல்லி விடலாம்.
கோயம்பேடு சந்தையில் தொடங்கும் படத்தில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான தொழிலாக…
Read More
கார்பன் திரைப்பட விமர்சனம்
கொஞ்ச காலமாகவே ஹாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் வியாபித்து இருக்கின்றன.
டைம் லூப் எல்லாம் இங்கே எடுபடுமா என்ற தயக்கததை மாநாடு வெற்றி துடைத்து எறிந்தது. ஆனால் இது அதற்கும் முன்பு திட்டமிடப்பட்ட படமோ என்னவோ, டைம் லூப் என்று கமிட் செய்து கொள்ளாமல் நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டமும் தான் கதை.
போலீசாக வேண்டும்…
Read More
கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம்.
இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை.
நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது.
இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் சாதியும், மதமும்…
Read More
சினம் கொள் திரைப்பட விமர்சனம்
உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம்.
இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை உலகமே அறியும். அந்தப்போரில் பலர் சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமல் போயும் இருக்க, போரை அடுத்து ஈழம் எப்படி இருக்கிறது, தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை…
Read More
வடிவேலுவுக்காக லண்டனில் முகாம் இட்டிருக்கும் இசையமைப்பாளர்
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்…
Read More
பூச்சாண்டி திரைப்பட விமர்சனம்
முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா ‘. அவரே கதையின் நாயகனாக இருக்கிறார்.
நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேகே…
Read More