July 22, 2019
  • July 22, 2019
Breaking News

Currently browsing இந்தியா

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தம் – மோடி வரவேற்பு

by by Jul 17, 2019 0

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக…

Read More

காந்தி ஜெயந்திக்கு பாஜக எம்பிக்கள் பாதயாத்திரை செல்க – மோடி

by by Jul 10, 2019 0

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்தது..இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
 
இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர். 
 

இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்,  மத்திய அரசு வரும் அக்டோபர் 2ம்…

Read More

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

by by Jun 8, 2019 0

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியடைந்தது.

இதையடுத்து கட்சி கூட்டத்தில் நாட்டிலேயே முதல் முறையாக 5 பேரை துணை முதல்வராக நியமித்தார் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் 25 கேபினட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுத்தார். அவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாள் முதலே, தன் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை…

Read More

தேர்தல் கமிஷனின் செல்பி போட்டி – 7 ஆயிரம் பரிசு

by by Apr 8, 2019 0

தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்…

2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானதாம். இப்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் இருக்கவே, இவர்களில் 90 சதவீதம் பேரை…

Read More

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு!

by by Jan 29, 2019 0

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2009ஆகஸ்ட் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த அவர், பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்…

Read More

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்

by by Jan 19, 2019 0

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.
 
இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம். 
 

பிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப்…

Read More

என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் மோடிக்கு இல்லை – ராகுல் காந்தி

by by Jan 2, 2019 0

ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து…

“ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் ‘எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறது?’ என பாஜகவினர் கேட்கிறார்கள்.

இவ்விவகாரம் தொடர்பாக…

Read More

அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

by by Dec 3, 2018 0

மகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி  மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது தெரிந்திருக்கும்.
 
அப்படி நாசிக் விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

Read More

பெட்ரோல் டீசல் விலை ரூ.2.50 குறைப்பு – பாஜக ஆளும் மாநிலங்களில் ரூ.5 குறைப்பு

by by Oct 4, 2018 0

வரலாறு காணாத வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியதை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். ஆக மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில…

Read More

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by by Sep 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது..

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும்…

Read More