May 5, 2024
  • May 5, 2024
Breaking News
August 31, 2023

செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம்

By 0 355 Views

செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

“பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி, செப்டம்பர் 22-ம் தேதி வரை என மொத்தம் ஐந்து அமர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்,” என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.