September 16, 2024
  • September 16, 2024
Breaking News
September 1, 2024

அதுல்யா சீனியர் கேர்-ன் ‘முதியோரை கனிவுடன் பராமரித்தல்’ வாக்கத்தான்

By 0 68 Views

500 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர் கேரின் “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” வாக்கத்தான் நிகழ்வு

சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதையும் மற்றும் முதியோர் பராமரிப்பையும் வலியுறுத்தியது…

சென்னை, 1 செப்டம்பர் 2024 – இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இன்று, “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” (“Caring for a Senior”) என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் 500-க்கும் அதிகமான நபர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். தன்னார்வலர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்த இந்த வாக்கத்தான் நிகழ்வு காலை 6:00 மணிக்கு தொடங்கியது.

முதியோர்களின் நலவாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தும் இந்நிகழ்வு, பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் வெற்றி கண்டிருக்கிறது. 

இந்நிகழ்வை காட்சிப்படுத்தும் டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகளை பெருமிதத்துடன் அணிந்த பங்கேற்பாளர்கள் சென்னையின் அழகான கடற்கரையை ஒட்டி இந்த நடை பயணத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர். வெறுமனே ஒரு உடற்பயிற்சி நடவடிக்கையாக இல்லாத இந்நிகழ்வு, முதியோர்கள் மீதான அக்கறை, கனிவு, ஒருமைப்பாடு மற்றும் சமூக உணர்வை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

மூத்தகுடிமக்களின் தனித்துவமான தேவைகளை கனிவுடன் பரிசீலிக்கவும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ளவும் பங்கேற்பாளர்களையும் மற்றும் பார்வையாளர்களையும் வலியுறுத்துவதாக அமைந்த இந்த வாக்கத்தான் நிகழ்வு முதியோர் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலுவாக எடுத்துரைத்தது. 

நடை பயணத்திற்கும் கூடுதலாக, இந்நிகழ்வை என்றும் நினைவுகூரத் தக்கதாகவும் மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிற அனுபவமாகவும் ஆக்குவதே இலக்காகக் கொண்ட வேறுபிற சிறப்பம்சங்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன. பங்கேற்பாளரும், இந்த உன்னத நோக்கத்திற்கான அவரது மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில் ஒரு பாராட்டு சான்றிதழை பெற்றார்.

இந்த வாக்கத்தான் நிகழ்வு முழுவதிலும் தெம்போடும், உற்சாகத்தோடும் பங்கேற்பாளர்கள் இருப்பதற்காக சிற்றுண்டி மற்றும் பானங்களும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான முதியோர்களின் நலவாழ்வு மீது சமூகத்தின் பிற பிரிவினர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் இந்நடை பயணத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் குறிக்கோள் உணர்வும், தோழமையான நட்புறவும் வெளிப்பட்டது. 

இந்நிகழ்வின் சிறப்பான வெற்றி குறித்து தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்ட அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனரும் & நிர்வாக இயக்குநருமான டாக்டர். கார்த்திக் நாராயண் R, “இன்றைய வாக்கத்தான் நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, நமது சமூகத்தில் முதியோர் பராமரிப்பு மீது வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. உண்மையிலேயே முக்கியமான குறிக்கோள்களுக்காக மக்களை ஒருங்கிணைக்கிற செயல்தளங்களை உருவாக்குவதில் அதுல்யாவில் செயல்படும் நாங்கள் நம்புகிறோம்.

நமது முதியோர்களின் மிக முக்கிய தேவைகள் பற்றி விழிப்புணர்வை இன்றைய நிகழ்வு உயர்த்தியிருக்கிறது மற்றும் ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நமது சமூகத்தின், குறிப்பாக நமது உண்மையான அக்கறையையும், பெருமதிப்பையும் பெறுவதற்கு தகுதியுள்ள நமது மூத்தகுடிமக்களின் நலவாழ்வு பற்றி அதுல்யாவில் நாங்கள் ஆழமான அக்கறை கொண்டிருக்கிறோம். நமது முதியோர்கள் பராமரிக்கப்படுவது மட்டுமன்றி கொண்டாடப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்பதற்காக அக்கறை மற்றும் கனிவு கலந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றும் பல வழிமுறைகளுள் இந்த வாக்கத்தான் நிகழ்வும் ஒன்றாகும்” என்று கூறினார்.

சமூகத்தின் மீது அதுல்யா கொண்டிருக்கும் ஆழமான அக்கறை, முதியோர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதற்காக அது தற்போது மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் நேர்த்தியாக வெளிப்படுகிறது.

“முதியோரை கனிவுடன் பராமரித்தல்” என்ற இந்த வாக்கத்தான், முதியோர்களுக்கு ஆதரவையும் அவர்கள் மீதான விழிப்புணர்வையும் ஊக்குவிப்பதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் சமூகத்தினரை ஈடுபடுத்த அதுல்யாவின் விரிவான முன்னெடுப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகும். இதுபோன்ற நிகழ்வுகள் வழியாக முதியோர்கள் ஆதரிக்கப்படுகிற மற்றும் சமூக வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்படுகிற ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும், வலுவான சமூக பிணைப்புகளை உருவாக்குவதும் அதுல்யாவின் நோக்கமாகும். 

அதுல்யாவின் அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதோடு நின்றுவிடுவதில்லை; முதியோர்களுக்கு முழுமையான மற்றும் கனிவான பராமரிப்பை வழங்குவதில் இந்நிறுவனம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பராமரிப்பு திட்டங்கள், புதுமையான உதவப்படும் வாழ்க்கை அமைவிட வசதிகள் மற்றும் அர்ப்பணிப்புமிக்க கவனிப்பாளர்கள் குழு ஆகியவற்றின் மீது சிறப்பு கவனத்துடன் இந்தியாவில் முதியோர் பராமரிப்பு தளத்தில் அதுல்யா தொடர்ந்து முதன்மை வகித்து வருகிறது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையின் தாக்கம் வலுவானது என்பதை நினைவூட்டும் நினைவாக இன்றைய வாக்கத்தான் வெற்றி அமைந்திருக்கிறது.

முதியோர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் தனது முயற்சிகளை தொடர்வதில் அதுல்யா தன்னை மனமார அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.