நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது.
மதுக்கடைகளில் ஒருநேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது .
மதுக்கடையில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு
டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி இல்லை, கடைகளுக்கு மட்டுமே அனுமதி
ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இருந்த நேரம் மாற்றம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி .
அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்
அத்துடன், மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ’டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது எனவும் அது கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.