September 14, 2026
  • September 14, 2026
Breaking News
May 9, 2019

ஜெய்யை மிரட்டவிருக்கும் தல தளபதி வில்லன்கள்

By 0 1074 Views
‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிப்பது தெரிந்த விஷயமாக இருக்க, அவருடைய வில்லன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ஒரு வில்லன் அல்ல, இந்தப் படத்தின் இரு வில்லன் களைப் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதுவும் அவர்கள் தல, தளபதியிடம் மோதிய வில்லன்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது.
 
ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்களாம். 
 
“சூப்பர் ஹீரோவாக நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனைத் தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். எனெனில் அவர்களது உடற்கட்டும், அவர்களின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.
 
இந்த இருவருமே படத்திற்கு முழுமையான பொருந்துவார்கள் என உணர்ந்தோம். மேலும், அவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள்.
 
ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.
 
இவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தப் படத்தில் வி.தினேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் உலகெங்கிலும் உள்ள 450 சி.ஜி.தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தப்படத்தில் காட்சிகளில் பிரமாண்டம் மட்டுமல்லாமல், உணர்வுகளுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் கூடுதலாக.
 
ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை நாகர்கோவிலைச் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.