July 2, 2025
  • July 2, 2025

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

by on June 23, 2018 0

அப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார். அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி. வாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க […]

Read More

ஆந்திரா மெஸ் விமர்சனம்

by on June 23, 2018 0

படத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும். பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும் அசைன்மென்ட்டை ஒத்துக்கொண்டு அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல் லவட்டிக்கொண்டு காட்டில் ஒரு ஜமீன் தோட்டத்தில் அடைக்கலமாகிறார். பின்னர் என்ன நடந்தது […]

Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by on June 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து… “ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே […]

Read More

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு நல்ல தகவல் வருமா?

by on June 22, 2018 0

எங்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கைக்கு வரவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? இதே கவலைதான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் என்றால் நம்புவீர்களா..? ஆனால், அதுதான் உண்மை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய உயர்வை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைக்க விரும்புவதாகவே கூறப்பட்டது. இன்னும் உயர்த்தப்பட்ட […]

Read More

அன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்‌ஷன்

by on June 21, 2018 0

மணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்‌ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார். தன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே பாவனாவை டப்பிங் பேச வைத்தவைத்தவர் அவர். இப்போது கண்ணன் இயக்கி முடித்திருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மேகா ஆகாஷைத் […]

Read More

சர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..?

by on June 21, 2018 0

நாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல் […]

Read More

இட்லி சாப்பிட 29ம் தேதி வரை பொறுத்திருங்க..!

by on June 21, 2018 0

தமிழ்ப்படங்களுக்கு டைட்டில் வைப்பதென்பது எள்ளின் தோலை உரித்து அதன்மேல் ஈயம் பூசுகிற வேலை. அதனால் இருக்கிற தலைப்புகளையே எடுத்து வைத்து ரசிகர்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாமாக தலைப்பு வைக்கிறேன் பேர்வழி என்று வதைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு புறம். இதில் சொந்தமாக எல்லோருக்கும் பிடிக்கிற தலைப்பைப் பிடிப்பவர்கள் வெகு சிலரே. அது கதைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் இயக்குநர் வித்யாதரன் தன் படத்துக்கு ‘இட்லி’ என்று தலைப்பு வைத்துள்ளார். காமெடி த்ரில்லர் ஜேனரில் […]

Read More

இன்று ராகுல் காந்தியை சந்தித்த கமல் நாளை சோனியாவைச் சந்திக்கிறார்

by on June 20, 2018 0

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த கமல், பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்த கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையமும் கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எந்த ஆட்சேபமும் வரவில்லை. இந்நிலையில் அவரை இன்று தேர்தல் […]

Read More
CLOSE
CLOSE