March 25, 2025
  • March 25, 2025
Breaking News
June 22, 2018

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு நல்ல தகவல் வருமா?

By 0 1345 Views

எங்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கைக்கு வரவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? இதே கவலைதான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் என்றால் நம்புவீர்களா..? ஆனால், அதுதான் உண்மை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய உயர்வை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைக்க விரும்புவதாகவே கூறப்பட்டது.

இன்னும் உயர்த்தப்பட்ட ஊதியம் கைக்கு வராத நிலையில் நாளை இந்திய அணி மூன்று மாத சுற்றுப்பயணமாக இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ள அணி வீரர்களின் ஊதிய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறுமா என்று தெரியவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று கூடவிருக்கும் பொறுப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் கமிட்டியின் அறிவிப்புகளுக்கு எதிராக விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

நல்ல தகவல் வந்தால் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக விளையாடி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.