July 1, 2025
  • July 1, 2025

8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் போராட்டம்

by on July 2, 2018 0

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து… “அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். 8 […]

Read More

அறிஞர் அண்ணாவை நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா என்றார்கள் – சைதை துரைசாமி

by on July 1, 2018 0

‘உலக எம்.ஜி.ஆர் பேரவை’ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விழா பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகளான முருகு பத்மநாபன், சைதை துரைசாமி, ஐசரி கணேஷ், நடிகை லதா கலந்து கொண்டு பேசினர். முருகு பத்மநாபன் – “கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் எம்.ஜி.ஆர் பக்தர்களின் மாநாடு நடத்தினோம். அதில் சைதை […]

Read More

குறும்பா பாடலை 2000 முறை பார்த்தேன் – ஜெயம் ரவி

by on July 1, 2018 0

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். பட வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா நடக்க, அதில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். விழாவில் கலந்து கொண்ட எடிட்டர் மோகன், மோகன்ராஜா, ஜெயம் ரவி பேசியதிலிருந்து… மோகன்ராஜா – “டிக் […]

Read More

கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

by on June 30, 2018 0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார். குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற […]

Read More

ஜூலை 20 முதல் 68 லட்சம் லாரிகள் ஓடாது..!

by on June 30, 2018 0

தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வரும் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கூறியதிலிருந்து… “சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நாங்கள் செலுத்துவதாக கூறுகிறோம். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை […]

Read More

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாரூர் ஏரியில் நீர் திறப்பு – முதல்வர்

by on June 28, 2018 0

பாரூர் ஏரியில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து… “கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக […]

Read More
CLOSE
CLOSE